Post Web 4 copy

மகிழுங்கள், நன்மை செய்யுங்கள்...

Rejoice & Do Good...

29 7 2023 copy 1024x899

                              இயேசு கிறிஸ்துவின் அன்பின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கும் நீங்கள் பலம்கொண்டிருக்கும் விசுவாசத்தில் விருத்தியடைவதற்கு ஆதாரமாக பிரசங்கி 3:12-ஐ பற்றி பார்ப்போம். கவலை இல்லாத மனிதராக நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்ல முடியாத நிலையில் உங்களை சுற்றி பல துன்பங்களும், நெருக்கங்களும், இடறல்களும், இக்கட்டான சூழ்நிலைகளோடு வாழ்கிறீர்களா? கவலைப்படாதீர்கள் முதலாவது கர்த்தரை விசுவாசியுங்கள், இயேசு கிறிஸ்து உங்களுக்காக உலகம் தர முடியாத சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தந்திருக்கிறார். எப்படி பிரசங்கி காலத்தில் இயேசு கிறிஸ்து மகிழ்ச்சியாக இருக்க சொல்லியிருக்கிறாரோ அதே கிறிஸ்து இன்று உங்களை மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார். நீங்கள் உங்கள் வாழ்வில் அனேக நன்மையை செய்யலாம் எப்படி தெரியுமா? நீங்கள் மகிழ்ச்சியாயிருந்து, உங்களை சுற்றியுள்ளவர்களின் தேவைகளை சந்தித்தாலோ அல்லது ஏழைகளுக்கு தேவைப்பட்டதை செய்தாலோ அதுவே நன்மையாக மாறிவிடும். மகிழ்ந்திருங்கள், நன்மை செய்யுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

                                    I greet you in the loving name of Jesus Christ. Let’s look at Ecclesiastes 3:12 as a supplement that will help you to grow in faith that is still strong today. Are you living with so many sufferings, closeness, stumbling and dilemmas around you that you cannot say that I am living as a carefree person? Do not worry, first believe in God, Jesus Christ has given you happiness and peace that the world cannot give. Just as Jesus Christ told you to be happy in the preaching time of Solomon in Ecclesiastes, Christ wants you to be happy today. Do you know how you can do a lot of good in your life? If you are happy and you meet the needs of those around you or do what is needed by the poor, it turns out to be good. Rejoice, do good and may the Living Lord bless you. Amen.

Comments are disabled