Post Web 24 copy copy

நன்மையும் கிருபையும் தொடரும்...

Goodness & Mercy Will Follow..

Goodness & Mercy Will Follow

  இயேசு கிறிஸ்துவின் அன்பின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கும் நீங்கள் விசுவாசத்தில் விருத்தியடைவதற்கும் இந்த ஆண்டின் மீதம் இருக்கிற மாதங்களில் கர்த்தரை மையமாக கொண்ட வாழ்வை வாழ கர்த்தர் உங்களோடு சங்கீதம் 23 : 6 மூலம் பேசுகிறார். கர்த்தரின் பிள்ளையாகிய உங்கள் வாழ்வில் இன்று இந்த வசனத்தில் சொல்லியிருக்கிறபடி உங்களின் வாழ்நாள் எல்லாம் நன்மையும், கிருபையும் உங்களைத் தொடரும். கர்த்தருடைய கிருபையும் நன்மையும் உங்களைத் தொடர வேண்டுமென்றால் உங்களது சுய புத்தியின் மேல் சாயாமல் கர்த்தரை நம்பி நடக்கும்போது மாத்திரமே தொடரும். கர்த்தரை மட்டுமே சார்ந்து வாழ்வது கடினமான காரியமா ? இல்லை – கர்த்தர் தான் உங்களை உண்டாக்கினார், கர்த்தர் தான் உங்களை போஷித்து, உடுத்துவித்து நடத்துகிறார் ஆனால் நாம் பல நேரங்களில் கர்த்தரை சாராமல் நம்முடைய வேலையையோ, வருமாணங்களையோ அல்லது மற்றவரையோ முக்கியத்துவமாக வைக்கிறோம் அப்படி வைக்காமல் வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும் என்று சொல்லி, ஜெபித்து, விசுவாசியுங்கள். அப்படிப்பட்ட விசுவாசத்தை கர்த்தர் பார்த்து உங்களுக்கு உதவுவார் ஏன், உங்களைப்போன்ற சூழ்நிலையில் உள்ள மற்றவர்களுக்கும் உங்களை உதவச் செய்திடுவார். ஆதலாம் ஞானத்தோடு  கர்த்தரை முன்னிலைப்படுத்தி அதிகாலையிலேயே ஜெபியுங்கள் – அவர் உங்களுக்கு பதில் அளிப்பார், அவருக்கு சாட்சியாய் வாழுங்கள் – அவர் உங்களை திருப்தியாக்குவார், ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவருக்கு நன்றி செலுத்துங்கள் – அவர் புதிய நாளில் உங்களோடு இருந்து அற்புதங்களைச் செய்வார். இந்த வசனத்தில் பரிசுத்த ஆவியானவர் நமக்கு விசுவாச அறிக்கை முக்கியமானது என்று உணர்த்துகிறார். ஆதலால் விசுவாசத்தில் பெலங்கொண்டு, கர்த்தரில் மகிழ்ச்சியாயிருங்கள் அப்போது கர்த்தரின் நன்மையும், கிருபையும் உங்களை நடத்தும். ஆமென்.       

                            

Greetings in the loving name of Jesus Christ. The Lord is speaking to you through Psalm 23:6 to live a God-centered life today and in the remaining months of this year as you grow in faith. Goodness and grace will follow you all your life as it is said in  this verse today in your life as a child of God. If you want God’s grace and goodness to follow you, you should only continue to trust God and do not rely on your own wisdom. Is it difficult to depend on God alone? No – it is the Lord who made you, it is the Lord who feeds you, clothes you and leads you, but many times we put our work, income or others as important instead of the Lord. Because the Lord will see that kind of faith and help you, He will make you help others in the same situation as you. So pray to God early in the morning with wisdom – he will answer you, live as a witness to him – he will satisfy you, thank him at the end of each day – he will be with you in the new day and do miracles. In this verse the Holy Spirit tells us that faith is important. Therefore, be strong in faith and rejoice in the Lord, and the goodness and grace of the Lord will guide you. Amen. 

Comments are disabled