Web Post Image copy

தழும்புகளால் குணமாகிறோம்...

By his wounds we are healed...

28 3 2024 copy 884x1024

 இயேசு கிறிஸ்துவின் அன்பின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். இந்த புனித வெள்ளி என்று சொல்லப்படும் நாளிலும் கிறிஸ்தவர்கள் ஒருமித்து இயேசு கிறிஸ்து உலகிற்கு வந்து நமக்காய் தன்னையே ஜீவ பலியாக கொடுத்த நாளாக நினைவுகூறுகிறோம். நமது பாவங்களுக்காக, மனிதனாக பிறந்து மனிதனுடன் வாழ்ந்து, அற்புதங்களை செய்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பிதாவான தேவன் ஆக்கினைக்கு உட்படுத்தி அடித்து, ஒடுக்கி, ஜீவனையும் எடுப்பதற்கு  ஒப்புக்கொடுத்து மனிதர்களாகிய நம்மை மீட்டுக்கொண்டு அவரின் அன்பை வெளிப்படுத்தினார். அந்த அன்பின் வெளிப்பாடாக இயேசு கிறிஸ்து பட்ட பாடுகளில் ஒன்று தான் தம்முடைய சரீரத்தை அடிக்கும்படியாக கொடுத்தது. அவர் பட்ட காயங்களால் நமது பாவம், சாபம், நோய் எல்லாம் குணமாகிறது. இயேசு கிறிஸ்து பட்ட காயங்களின் வல்லமையே பெரியதாக இருக்கும்போது, அவர் தந்த ஆவியானவரின் வல்லமை எவ்வளவு பெரியது, அந்த ஆவியானவரை நமது உள்ளத்தில் வாசம்செய்வதற்கு நாம் செய்யவேண்டியது – இந்த நாளில் இயேசு கிறிஸ்து பட்ட காயங்களுக்காக நன்றி சொல்லி, உங்களது பாவம், சாபம், நோய் எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டு அதைப்பற்றி கவலைகொள்ளாதிருங்கள். இன்றைக்கு கர்த்தர் உங்கள் அற்பணிப்பை கண்டு வெளியறங்கமாய் பதில் கொடுப்பார். உங்களை ஆசீர்வதித்து தமது சமாதானத்தினால் நிறப்புவார், ஆசீர்வதிப்பார். ஆமென்.

 

Greetings in the loving name of Jesus Christ.Today many Christians remember this day Good Friday as Jesus Christ coming to us out of sheer love, sacrificing himself. We remember him as the Son of God, who came as Jesus Christ, born as a human being, performed miracles, sacrificed himself as the Father’s Will, and accepted us reconciling us to his love by offering himself and agreeing to take away our sins. Jesus Christ, as a manifestation of that love, gave his body on the cross. By his wounds, our sins, curses, and diseases are healed. Wounds of Jesus Christ on the cross is great, how much greater is God’s Holy Spirit greater than the Wounds of Jesus? To make Holy Spirit dwell within us, we must be grateful for Jesus Christ’s wounds on the cross . We must  repent from all our sins, curses, and believe against the diseases to be reconciled with the Lord. Today, God will see your obedience in hearing and acting by God’s Word & He will comfort you with his assurance, and bless you. Amen.

 

 

Comments are disabled